ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை (இ-புத்தகம்)
₹460.20
கருங்கடற் கரையோரம் அமைந்துள்ள மனநல விடுதியில் ஒரு துரதிர்ஷ்ட நாளில் நிகழ்ந்த சம்பவத்தின் கதை இந்த நாவல். அந்தச் சம்பவமே முதலும் முடிவுமாக இருக்க, இடையில் நேர்ந்தவற்றை …
மேலும்
கருங்கடற் கரையோரம் அமைந்துள்ள மனநல விடுதியில் ஒரு துரதிர்ஷ்ட நாளில் நிகழ்ந்த சம்பவத்தின் கதை இந்த நாவல். அந்தச் சம்பவமே முதலும் முடிவுமாக இருக்க, இடையில் நேர்ந்தவற்றை இந்நூல் விவரிக்கிறது. அந்த விவரிப்பில் எண்ணற்ற மனிதர்களும் கணக்கற்ற இடங்களும் ஏராளமான பொருட்களும் உட்படுகின்றன. அவை எல்லாமும் சேர்ந்து நாவலைப் பகடியும் திட்பமும் அவலமும் காவியத்தன்மையும் கொண்டதாக மாற்றுகின்றன. தமிழில் வெளியாகும் அய்ஃபர் டுன்ஷின் முதல் நாவல் ‘ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை’. அவரது குறுநாவல் அஸீஸ் பே சம்பவம் காலச்சுவடு வெளியீடாக முன்னர் வெளிவந்துள்ளது.
ISBN : 9789355234735
PAGES : 0
எம். கோபாலகிருஷ்ணன்
18 Aug 2025
தற்போது மின் நூல் வடிவிலும்
அய்ஃபர் டுன்ஷின்
‘ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை’
நாவலைப் பற்றிய பார்வை:
“மனநல விடுதியை மையமாகக் கொண்ட நாவலென்றபோதும் இதுவொரு அரசியல் நாவலும்கூட. இதில் காட்டப்பட்டுள்ள மனநல விடுதி என்பது ஒட்டுமொத்த துருக்கிதான் என்ற அரசியல் பார்வைக்கும் இடம் உள்ளது. … …
… கதைக்களம், கதாபாத்திரங்கள், மொழி என யாவுமே சவாலானதாய் அமைந்துள்ள இந்த நாவல் தமிழில் வெகு இயல்பாக வாசிக்கும்படியாக நேர்த்தியாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
… அளவில் பெரிய நாவலென்றாலும் கதை அமைப்பு, விதவிதமான விநோதமான கதாபாத்திரங்கள், மொழியாக்கத்தின் நேர்த்தி ஆகியவற்றின் காரணமாக இந்த வரலாற்று அறிக்கையை ஊன்றி வாசிக்க முடியும்.”