ஞானபீட விருது பெற்ற யு.ஆர். அனந்தமூர்த்தியின் சிறந்த படைப்புகளில் ஒன்று. கன்னட இலக்கியத்தில் திருப்புமுனையாகக் கருதப்படும் இந்த நாவலை இந்தியாவின் சமூக-அரசியல் சூழலின் மீதான கலாப்பூர்வமான விமர்சனம் என்று சொல்லலாம். ஊழல், விழுமியங்களின் சிதைவு, அரசியல் சூழ்ச்சிகள், மனசாட்சியின் இடம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட நாவல் இது.
புரட்சிகரமான அரசியலை முன்னெடுக்கும் அரசியல் ஆளுமை ஒருவரின் மனக்குழப்பங்களையும் சுய பரிசோதனையையும் மையமிட்ட இந்த நாவல், அரசியல் சூழ்ச்சிகள், வாழ்க்கையின் பொருளைத் தேடுதல் எனக் கிளை பிரிந்து விரிந்து செல்கிறது.
இந்த நாவல் 'அவஸ்தை' என்ற பெயரில் 1987இல் கன்னட மொழியில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
நஞ்சுண்டனின் மொழியாக்கம் சரளமான வாசிப்புக்குத் துணைபுரிகிறது.