Your cart is empty.
இலங்கைத் தமிழ்நாவல் இலக்கியம்
ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்தரங்குகளில் முன்வைத்து, மாறுபட்ட அபிப்பிராயங்களை எதிர்கொண்டு, அவற்றால் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட … மேலும்
ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்தரங்குகளில் முன்வைத்து, மாறுபட்ட அபிப்பிராயங்களை எதிர்கொண்டு, அவற்றால் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய நூல் வெளிவருவது பெரும் பாராட்டிற்குரியது. ஈழத்துத் தமிழ் நாவல்களில் அக்கறை கொண்டோருக்குப் பயன்மிகுந்த ஒரு நூலைத் தேவகாந்தன் தந்திருக்கிறார்.
இது ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியப் பரப்பின் ஒரு முத்துக்குளிப்பு. எமது நாவல் இலக்கியக் கையிருப்பையும் அதன் தாரதம்மியத்தையும் ஒருசேரத் தொகுத்தளித்திருக்கும் பெரும் படையல். ஒரு சிருஷ்டி எழுத்தாளன் தேர்ந்த விமர்சகனாகவும் முகிழ்த்து, தனது வாசிப்பு என்ற உலைக்களத்தில் வார்த்தளித்த பனுவல் இதுவாகும்.
ISBN : 9789391093259
SIZE : 13.9 X 1.0 X 21.5 cm
WEIGHT : 258.0 grams
It is commendable that such a book has come out from someone who has explored and read the 135-year history of the Eelam novel over the past twenty-five years, presented critiques of it in seminars, faced different opinions and enriched himself with them. Devakanthan has given a useful book for those who are interested in Eelam Tamil novels.
It is a wonderful selection, and critical appraisal, of the Eelam Tamil novel literature. This is a work by a creative writer, who also delights as an accomplished critic.














