Your cart is empty.
கடல்
-துயரம், நினைவுகள், காதல் - இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் 'கடலை' உருவாக்கியிருக்கும் கூறுகள். கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன் இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த … மேலும்
-துயரம், நினைவுகள், காதல் - இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் 'கடலை' உருவாக்கியிருக்கும் கூறுகள். கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன் இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்கு மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு திரும்பவும் வருகிறார். பிள்ளைப்பிராயக் கோடைக்காலத்தில் பார்த்த அதே கிரேஸ் குடும்பத்தினரை முதுமைப் பருவத்தில் மீண்டும் அதே இடத்தில் சந்திக்கிறார். திருமதி. கிரேஸ் அவருடைய இரண்டு மகள்களான க்ளோயி, க்ளேய்ர் ஆகியவர்களுக்கிடையில் மாக்ஸுக்கு நேரும் உறவும் அதைத்தொடர்ந்து நிகழும் மன நகர்வுகளும் விரிவாகவும் நுட்பமாகவும் நாவலில் விவரிக்கப்படுகின்றன. இதுவரையான ஜான் பான்வில்லின் நாவல்களில் மிகச் சிறந்தது என்று பாராட்டப்படும் 'கடல்' நாவலின் தமிழாக்கம் இது.
ஜான் பான்வில்
ஜான் பான்வில் (1945) ஐரிஷ் நாவலாசிரியரும் திரைக்கதையாசிரியருமான ஜான் பான்வில் அயர்லாந்தின் கடலோர நகரான வெக்ஸ்போர்டில் பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு ஓவியக் கலையிலும் கட்டடக் கலையிலும் மேற்படிப்பைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பான்வில் எழுத்தராகப் பணியில் அமர்ந்தார். சலுகைக் கட்டணத்தில் இடங்களைப் பார்க்க முடியும் என்பதே இந்தப் பணியில் ஈடுபடக் காரணம். கிரீஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் சிறிது காலம் வசித்தார். பின்னர் அயர்லாந்து திரும்பிப் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். நவீன ஆங்கிலத்தில் எழுதுபவர்களில் நுட்பமான நடைக்கு உரியவர் என்று பாராட்டப்படும் பான்வில்லின் முதல் நாவல் ‘நைட்ஸ்பான்’ 1971இல் வெளியானது. ‘ரெவ்ல்யூஷன்ஸ் டிரையாலஜி’ என்ற முக்கதை மூலம் இலக்கியப் புகழ்பெற்றார். பெஞ்சமின் பிளாக் என்ற புனைப் பெயரில் குற்றவியல் கதைகளும் எழுதியுள்ளார். 2005இல் வெளிவந்த பான்வில்லின் பதிமூன்றாவது நாவலான ‘கடல்’ அவரை உலகப் புகழ்பெறச் செய்தது. அந்த ஆண்டு இதே நாவலுக்காக அவர் ‘மான் புக்கர் பரிசை’ப் பெற்றார்.
ISBN : 9789355233233
PAGES : 208
Irish Booker prize winner John Banville’s. The Sea revolves around sorrow, Memories and love. Very poetic prose, competently translated.<\p>
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மஞ்சு
“எம்.டி. வாசுதேவன் நாயரின் இந்த நாவல் காத்திருப்புகளின் கதை. காலமும் இடமும் மனங்களும் இந்தக் கதைய மேலும்
என் பெயர் சிவப்பு
காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் ச மேலும்










