Your cart is empty.


முதற்கால்
ஆழ்ந்த அறிவு, சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை, அசாத்தியமான ஆசிரியத்துவம், ஆயுர்வேதத்தை வெறும் மருத்துவ முறையாக மட்டுமின்றி முழுமையான வாழ்க்கைமுறையாகவே காணும் … மேலும்
ஆழ்ந்த அறிவு, சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை, அசாத்தியமான ஆசிரியத்துவம், ஆயுர்வேதத்தை வெறும் மருத்துவ முறையாக மட்டுமின்றி முழுமையான வாழ்க்கைமுறையாகவே காணும் அணுகுமுறை முதலானவற்றைக்கொண்ட டாக்டர் மகாதேவன் இந்திய ஆயுர்வேத உலகில் ஓர் இயக்கமாக விளங்குகிறார் என்று சற்றும் மிகைப்படுத்தாமலேயே சொல்லலாம்.
ஆயுர்வேதத்தின் தற்காலச் சவால்கள், போக்குகள், நவீன மருத்துவத்திற்கும் அறிவியலுக்கும் அதற்குமான உறவு என வரலாற்று நோக்கில் ஆயுர்வேதத்தை இந்த நேர்காணல் அணுகுகிறது. நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைவதின் சாத்தியக்கூறுகள், அதிலுள்ள அறச்சிக்கல்கள், அதிகாரப் போட்டிகள் எனப் பலவற்றைக் குறித்து ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகள் இந்த நேர்காணலில் உள்ளன.
தத்தளிப்புகளின் ஊடாக மகாதேவன் மேற்கொண்டுவரும் ஆன்மிகப் பயணத்தின் தடங்களையும் இதில் காணலாம். நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவராக மட்டுமின்றி, மொத்த வாழ்க்கையையும் முழுமையான ஆரோக்கியத்தை நோக்கிச் செலுத்தக்கூடிய முழுமையான ஆயுர்வேத வைத்தியராகத் தனது இலக்கை அடையும் பயணத்தில் உள்ள மகாதேவன் என்னும் அலாதியான ஆளுமையையும் அறிந்துகொள்ளலாம்.
ஆயுர்வேதத்திலும் இந்திய மருத்துவ முறைகளிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி சாமானிய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் இந்த நேர்காணல் அமைந்துள்ளது.
ISBN : 9789355230355
SIZE : 12.5 X 0.5 X 22.0 cm
WEIGHT : 0.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பாழ் வட்டம்
நவீன வாழ்வின் இயல்பான காட்சி பிம்பங்களைக் கவிதைக்குள் புகுத்துகையில் அச்சொற்கள் ஒரு மாயக் கணத்தைக மேலும்
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும் (1815-1945)
"பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெ மேலும்
முதற்கால்
ஆழ்ந்த அறிவு, சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை, அசாத் மேலும்
கர்னாடக இசையின் கதை
இசையுலகத்திற்கு உள்ளும் வெளியிலும் நிகழ்ந்துவரும் பல்வேறு விவாதங்கள், எழுப்பப்படும் கேள்விகள் ஆக மேலும்
அத்தைக்கு மரணமில்லை
மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் மேலும்
மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள்
ஓசையின் மூலாதாரம் யாரிடமிருந்து வருகிறது? உயிருள்ளவர்களும் உயிரற்றவையும் இதில் எப்படி ஒன்றிணைகிறா மேலும்
மோகப் பெருமயக்கு
தி. ஜானகிராமனைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் சுகுமாரன் எழுதிய கட்டுரைகள், குறிப்புகளின மேலும்
கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், மேலும்
மந்திரவாதியின் சீடன்
அய்ரோப்பியக் கலாச்சார வார்ப்புக்குப் பலியாகி, அகச் சிடுக்குகள் நிறைந்தவராய் அல்லாடும் ஒருவர் தனது மேலும்
ப்ராப்ளம்ஸ்கி விடுதி
பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர மேலும்
உடைந்து எழும் நறுமணம்
கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில மேலும்
ஒளிரும் பச்சைக் கண்கள்
சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரம மேலும்
மூச்சே நறுமணமானால் அக்கமகாதேவி
பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. மேலும்