Your cart is empty.
வனம் திரும்புதல்
புலம்பெயர் தேசங்களில் அலையும் மனிதர்களையும் பொருளாதார, சமூக பாதுகாப்பைக் கோரி நிற்கிற கதாபாத்திரங்களையும் பொ. கருணாகரமூர்த்தி தன் கதைகளில் உருவாக்கிப் பார்க்கிறார். அவரது கதாபாத்திரங்கள் மூக்கைச் சிந்தியபடி … மேலும்
புலம்பெயர் தேசங்களில் அலையும் மனிதர்களையும் பொருளாதார, சமூக பாதுகாப்பைக் கோரி நிற்கிற கதாபாத்திரங்களையும் பொ. கருணாகரமூர்த்தி தன் கதைகளில் உருவாக்கிப் பார்க்கிறார். அவரது கதாபாத்திரங்கள் மூக்கைச் சிந்தியபடி நிற்பதில்லை. மாறாகப் பொதுமனத்திற்கு அச்சத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கும் பாத்திரங்களாக உருமாறுகின்றன. குடிவரவாளர்கள், கேட்பாரற்று அநாதரவானவர்கள், மரண நிழலில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருப்போர், மனப்பிறழ்வடைந்தவர்கள், விதியே என அலக்கழிப்பவர்கள்போல கருணாகரமூர்த்தியின் அக்கறையும் கரிசனமும்! தொகுப்பிலுள்ள பதினான்கு கதைகள் ஒற்றுமைகளும் முரண்களும் நிறைந்தவை. மனிதர்களிடம், அரசியலிடம், சில நேரங்களில் மரணத்திடம்கூட அங்கதம் இழைந்த தொனியில் இணக்கத்தை வேண்டுகின்றன இக்கதைகள்.
ISBN : 9789389820300
SIZE : 14.1 X 1.0 X 21.4 cm
WEIGHT : 229.0 grams
A collection of fourteen short stories by Po. Karunakaramurthy. His characters cross through national borders looking for economic and social security. They are not people who stand helpless, but those who induce fear and anxiety in the imagination of ‘public’. There are as many contradictions between these stories, as there are common factors. They ask for empathy from people, politics and even death, with a thread of satire. The author’s care and attention are primarily on the orphaned, those who lost their mind, who are wander having left their worries with fate.













